REGISTRATION

img-20190125-wa0007-e1549350260570.jpg

Please click here for the registration form
பினாங்கு சுய மெய்யறிவகம்
PENANG SUYA MEIYARIVAGAM
Reg. No. PPM-010-07-06082008
No 9 Jalan Changkat Delima 3, 11700 Island Glades, Penang

குழந்தைகள் சமய வகுப்பு 2019

வணக்கம்! பினாங்கு சுய மெய்யறிவகம் நடத்தி வரும் சமய வகுப்புக்கு உங்கள் குழந்தையை அனுப்பி வைத்தமைக்கு முதலில் ஆசிரியர் குழு தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்த வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் வகுப்புகள் பயனுள்ளதாக அமைவதற்கு கீழ்குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
1) குழந்தைகளை சரியான நேரத்தில் வகுப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
2) குழந்தைகள் தொடர்ச்சியாக வகுப்பிற்கு வர வேண்டும். போதிக்கப்படும் விஷயங்களை கிரகித்துக் கொள்ள இது அவசியமாகும்.
3) குழந்தைகள் பாரம்பரிய உடையுடன் வகுப்புக்கு வர வேண்டும்.
4) வகுப்பில் பயன்படுத்தப்படும் அனைத்து புத்தகங்களையும் குழந்தைகள் வகுப்புக்கு எடுத்து வருவதைப் பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த வகுப்புக்கள் தொண்டூழியர்களால் நடத்தப்படுகின்றன. பாடத்திட்டங்கள் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. வகுப்புக்களின் நோக்கம் நிறைவேற குழந்தைகளின் முழு ஈடுபாடும், பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். நன்றி.

ஆசிரியர் குழு
பினாங்கு சுய மெய்யறிவகம்

RELIGIOUS CLASS FOR CHILDREN 2019

CHILDREN RELIGIOUS CLASS 2019

Vanakkam! Teachers’ Committee of Penang Suya Meiyarivagam is thanking the parents for sending their children to this Religious Class. Kindly note regulations for the Admission of Penang Suya Meiyarivagam Religious Class 2019. Regulations are as follows:-

1) Children must be sent on time and punctuality be observed all the time.
2) Children’s attendance is compulsory to ensure they grasp the lessons fully.
3) Children are required to wear traditional attires unless requested otherwise by the teachers.
4) Parents to make sure children carry all the relevant books to class.

This class is conducted by volunteers. The syllabus, lessons and activities are prepared by them. We expect children’s full participation and parent’s cooperation. This is vital for the development of the children and further the success of the class. Thank you.

Teachers Committee
Penang Suya Meiyarivagam

 

பினாங்கு சுய மெய்யறிவக சமய வகுப்பு
Religious Class by Suya Meiyarivagam
விதிமுறைகள் / Rules 2019

பினாங்கு சுய மெய்யறிவகம் நடத்தி வரும் சமய வகுப்பில் பயிலும் மாணவர்கள் பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். Students attending Penang Suya Meiyarivagam classes are requested follow the rules as stated below:-

பதிவும் கட்டணமும் / Registration & Fees

i) புதிதாக வரும் மாணவர்கள் பதிவு பாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
New students are requested to fill up the registration form.

ii) 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே வகுப்பில் அனுமதிக்கப்படுவர்.
Only children 6 years and above are allowed to attend the class.

iii) புதிதாக பதிவு செய்பவர்கள் மவெ. 20.00 செலுத்த வேண்டும்.
(பதிவுக் கட்டணம் & மாதக்கட்டணம்)
New comers are to pay RM 20.00 as registration fee. (Registration fee and monthly payment)

iv) மாதக் கட்டணம் ஒரு மாணவருக்கு மவெ. 10.00
Monthly fees is RM 10.00 per student.

v) மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
Fees are to be paid first Sunday of the month.

வாங்க வேண்டிய புத்தகங்கள் / Books to buy

i) ஒவ்வொரு மாணவரும் திருப்பாடல் புத்தகம் (மவெ 10.00) வாங்க வேண்டும்.
Each student must buy Thiruppaadal book. ( RM 10.00)

ii) ஒவ்வொரு மாணவரும் தமிழ் பயிற்சிப் புத்தகம் (RM 10.00) வாங்க வேண்டும்.
Each student must buy Tamil Exercise book ( RM 10.00).

சமய வகுப்பு விபரங்கள்
Class Details

சமய வகுப்பு சரியாக காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மதியம் 12.00க்கு முடிவுறும். Religious class starts at 9.30 am and ends at 12.00 pm.

பாடங்கள் / Lesson

9.30 – 10.15 am தியானம் / Meditation
மந்திரம் ஓதுதல் Mantras Recital
தேவாரத் திருவாசக பாராயணம்
Thevaram Thiruvasagam Hymns Singing
தேவார மந்திர விளக்கங்கள்
Mantras, Thevaram Explanation

10.15 – 11.00 am தமிழ் பாடம்
Tamil Lessons

11.00 – 12.00 pm சமய பாடம் (விளக்கமும் செயல்முறையும்)
Religious Lesson & Practical

வகுப்பு பிரிவு / Class Level

பிரிவு 1 / Level 1 —– 6 – 7 வயது years
பிரிவு 2 / Level 2 —– 8 – 9 வயது years
பிரிவு 3 / Level 3 —– 10 – 11 வயது years
பிரிவு 4 / Level 4 —– 12 – 14 வயது years
பிரிவு 5 / Level 5 —– 15 வயது years above

பாடங்கள் / Syllabus

கற்கும் திறன்
Learning Skills

யோக வாழ்வியல்
Yoga & Pranayaman

ஆகமச்சிந்தனை
Agamic Thinking

சித்த வாழ்வியல்
Siddha Livelihood

இயற்கை உறவியல்
Ecological Education

கொள்கைகள்
  • அனுபவத்திற்கு உட்படும் அறிவே முழுமை பெற்ற அறிவாகுவதால், எந்த அறிவும் அனுபவமாக்கப்பட வேண்டும்.
  • உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் என்பது தாரக மந்திரம் என்பதால் நம்மை நாம் இறைவன் வெளிபடும் நிலனாக (இடமாக) மாற்ற வேண்டும்.
    சுயகல்வி (சிந்தித்தல், தன்னை ஆய்வு செய்தல், தன்னை அறிதல்) வாழ்வின் அளவுகோலாக வேண்டும்.
  • முக்தி என்ற மும்முச்சுத்துவம் (இவ்வாழ்க்கையின் முடிவைத் தேடுவது) நமது இலக்கு.
  • அருளே அறம், பொருள், இன்பமாக ஆள்விக்கும் என்ற பேருணர்வை உள்ளுணர்வாக கொள்ளும் முயற்சி.
கல்வித்திட்டம் (பாடமுறை)
  • ஒரு முழுமனித வளர்ச்சிக்கு தேவையான எல்லா திறன்களையும், வாழும் கலைகளையும் (அறிவியல், அறம், பொருளாதாரம், கலை, விளையாட்டு மற்றும் பல) இங்கு கல்வி முறையாக போதிக்கப்படும்.
  • தமிழ்மொழி, பாரம்பரிய மரபுகள், நுண்கலைகள் கல்வியின் மையக் கருப்பொருளாகப் போதிக்கப்படும்.
  • தமிழ்மொழி முதன்மை மொழியாக இங்கு பயன்படுத்தப்படும் (மற்ற மொழிகள் புறக்கணிக்கப்படாது, வளர்க்கப்படும்.
  • சுயதிறன் வளர்க்கும் கல்வி முறையே இங்குள்ள போதனா முறையாக கற்பிக்கப்படும்.
  • அறிவினை அனுபவத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தில் போதிக்கப்படும் கருத்துக்களும் நடைமுறை வாழ்க்கையில் மாணவர்கள் அமல்படுத்த, செயல்படுத்த, செயல்வழி கல்வி முறை வகுக்கப்பட்டு போதிக்கப்படும்.
மாணவர்கள்
  • 6 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களே இங்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    திறனுக்கு ஏற்றவாறு, மாணவர்கள் குழு பிரிக்கப்படுவார்கள்.
    மாணவர்கள் தங்களின் வளர்ச்சியைச் சுயமதிப்பீடு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள்
  • சிறப்பு கண்காணிப்பு தேவைப்படும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் (counseling) தகுந்த ஆசிரியரால் வழங்கப்பட்டு மேற்பார்வையிடப்படும்.
  • செயல்முறை கல்விமுறை என்பதால் மாணவர்கள் ஆய்வுகள், சேகரிப்புகள், பரிசோதனை, தேடல்கள், பேட்டி எடுத்தல், தோட்ட வேலைகள், போன்ற செயல்களில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
ஆசிரியர்கள்
  • அனுபவம் வாய்ந்த, துறை சார்ந்த ஆசிரியர்களால் போதானாமுறைகள் தயார் செய்யப்படும்.
  • தொடர்ந்து ஆசிரியர்கள், துறை அறிஞர்களால் பயிற்றுவிக்கப்படுவார்கள். ஆகவே பயிற்றுநர்கள் பயிற்றுவிக்கப்படும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும்.
பெற்றோர்கள்
  • வாழ்வியல் (சமயம், ஆரோக்கிய வாழ்வு, இன்னும் பல) பட்டறைகள், பயிற்சி களங்கள் பெற்றோர்களுக்கு தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படும்.
  • பாடத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் பெற்றோர்களின் கருத்துக்களையும் வரவேற்கின்றோம்.
  • ஆசிரம வளர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்களிப்பை (நன்கொடையாகவே, பொருள் உதவியாகவோ, சேவையாகவோ ஆலோசனையாகவோ) பெரிதும் வரவேற்கின்றோம்.
  • உதவிகள் தேவைப்படும் வறுமையான குடும்பத்திற்கு (குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்களுக்கு) மேம்பாட்டு வழிகாட்டல் முயற்சிகள் செய்யப்படும். பெற்றோர்கள் சுயமாக இயங்க வழிகாட்டல்களும், ஆதரவும் வழங்கப்படும்.
ஆசிரம பொதுவிதிகள்
  • ஆசிரமத்தில் நடத்தப்படும் எந்த நிகழ்ச்சியும் வியாபார நோக்குடன் இருத்தல் கூடாது.
  • காலம் தவறாமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எல்லா நிகழ்ச்சிகளும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்படும். வகுப்புக்கு வரும் அனைத்து குழந்தைகளும், ஆசிரியர்களும் பாரம்பரிய உடைகள் அணிந்து வர வேண்டும்.
  • எந்த சூழ்நிலையிலும் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவுகளும், குப்பை உணவுகளும், அசைவ உணவுகளும் ஆசிரமத்தின் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டாது.
  • ஆசிரமத்திற்கு வரும் பெற்றோர்கள், ஆசிரமத்திற்கு ஏற்ற முறையான உடைகளை அணிந்து வர வேண்டும்.
    மவெ1200 குறைவான குடும்ப வருமானம் பெறும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திரக் கட்டணம் விதிக்கப்படமாட்டாது.